Skip to main content

வாக்கு மையத்தில் இருந்து வெளியேறி தனிமையில் அமர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

கன்னியாகுமாி தொகுதியில்  ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வரும் பொன். ராதாகிருஷ்ணன் தொடா்ந்து 8 ஆவது சுற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  காங்கிரஸ் வேட்பாளா் வசந்தகுமாரை விட பின் தங்கி உள்ளாா்.

 

p

           

இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் வாக்கு மையத்தில் இருந்து வெளியே வந்த பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் உள்ள  ஒரு செட்டில் தனிமையில் உட்காா்ந்து செல்போனில் தோ்தல் செய்திகளை பாா்த்து கொண்டியிருக்கிறாா். அதே போல் ஒவ்வொரு சுற்றிலும் தோ்தல் முடிவுகளை அறிவிக்கும் போது அதையும் குறித்து கொள்கிறாா்.    

 

p

       

 8- ஆவது சுற்றின் முடிவை குறித்து கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் 20 சுற்று இருக்கிறது.  இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதே நேரத்தில் மனம் தளராமல் தோ்தல் முடிவு முழுவதையும் அறிந்த பின்பு தான் இங்கிருந்து செல்வேன் என்று வழக்கம் போல் அவரை சந்திக்கும் பத்திாிக்கையாளா்களின் தோளில் தட்டி   கூறுகிறாா்.

 

p

                       

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

pon radhakrishnan meets rajini in kanniyakumari

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

 

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு அவரைப் பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிகளில் கூடிவிட்டனர். பின்பு ரஜினியைக் காரில் கண்டதும் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். பின்பு திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் கெட்டப்புடன் 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன் என ரஜினி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இந்த நிலையில் இப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துவருவதாக தெரிகிறது. ரஜினியை பாஜக-வை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

 

 

 

Next Story

“முதன்மைக் கட்சியாகும் பயணத்தைத் துரிதப்படுத்தியுள்ளோம்” - பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"What people have benefited from Prime Minister's schemes, plans have been made to feed the people" Pon. Radhakrishnan

 

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கை இலக்காகக் கொண்டு பணிகள் பகிரப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பிரதமரின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து தமிழக மக்கள் எந்த அளவிற்குப் பயன்பெற்றுள்ளார்கள் என்பதைத் தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் அடித்தளம் அமைக்கும் வகையில் பாஜகவின் பார்வை ஆழமாகச் சென்றுள்ளது. 

 

அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநிலத் தலைவரின் கருத்துகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியேதான் தொடர்கிறது. அனைத்துக் கட்சிகளின் நோக்கமும் முதன்மைக் கட்சிகளாக வரவேண்டும் என்பதுதான். பாஜகவின் நோக்கமும் அதுதான். அதை நோக்கிய பயணத்தைத்தான் துரிதப்படுத்தியுள்ளோம்” என்றார்.