Skip to main content

அணைகட்ட அனுமதியில்லை;ஆய்வுக்குத்தான் அனுமதி என மழுப்பும் பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
pon

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழகிழமை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தலைமை வகித்தார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராமசந்திரசேகரன் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மத்தியஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்  சார்லஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராமசந்திரசேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைத்தலைவர்  மதுக்கூர். ராமலிங்கம் டாக்டர் அம்பேத்கர் இருக்கையின் உதவிப்பேராசிரியர்  ராதிகாராணி, பல்வேறு புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், ஊழியர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், சிதம்பரம் நகர பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

 

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன் தனது தலைமயுரையில் டாக்டர் அம்பேத்கர் பன்முகத்தன்மை உடையவர் என்றும், சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்வதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர்  பொன்ராதாகிருஷ்ணன் தனது உரையில் மனிதனுக்கு முதுகெலும்புதான் மிக முக்கியமானது அதுபோல ஒரு நாட்டிற்கு முதுகெலும்பாகிய அரசியல் அமைப்பு சட்டத்தை சிறப்பாக உருவாக்கியவர் அன்னல் பாரதரத்னா மாமேதை டாக்டர் அம்பேத்கர் என்றும் அன்றைய காலகட்டத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இக்காலம் வரை உள்ள நிலைகளை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர் என்றும்  அவரது 63வது நினைவுநாளில் அவரது சிந்தனைகள்,வாழக்கை முறைகளை அடியொற்றி நாம் அனைவரும் அவர் வழிநடக்க வேண்டும் என்றும் டாக்டர் அம்பேத்கர் எந்த தனி ஜாதிக்கும் சொந்தமல்ல, அவர் இந்திய நாட்டின் அனைவருக்கும் சொந்தமானவர், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என தெரிவித்தார்.

p

  பின்னர் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கையும், தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து நடத்திய மகளிருக்கான அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற எழுத்துப்போட்டியில் வெற்றி பெற்ற எட்டுபேருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கபரிசு வழங்கி, பாராட்டினார்.

 

அண்ணல் அம்பேத்கரின் பன்முகத்தன்மை என்ற தலைப்பில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர்  மதுக்கூர். இராமலிங்கம் பேசுகையில் அம்பேத்கார் பன்முகை தன்மை கொண்டவர், அவர் வடித்த அரசியலமைப்பு சட்டத்தை சரியாக பயன்படுத்தி இருந்திருந்தால் இன்று எஸ்சி. எம்பிசி உள்ளிட்ட ஜாதிகள் இருந்திருக்காது. 8 மணி நேர வேலை. சுரங்கங்கம் உள்ளிட்ட ஆபாத்தான வேலைகளை பெண்கள் செய்யக்கூடாது, பிரசவகாலங்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் ஒரு சமூக பெண்களுக்காக சட்டம் இயற்ற வில்லை. அவரை ஒரு சமூகத்தின் தலைவர் என்று பிரித்து பார்த்தால் அதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. மத்திய தேர்வு ஆணையம், ரிசர்வ் பேங்க் அமைய காரணம் அம்பேத்கார் என அம்பேத்காரை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் என்றார். இருக்கையின் இணைப்பேராசிரியர் முனைவர்  சௌந்திரராஜன் நன்றி கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்,

’’தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்திற்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும். புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. அவர்களை ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் தடுத்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

   கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட நிதி வழங்கி உள்ளது. பின்னர் அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தெல்லாம் பேசுவதற்கு காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இதுகுறித்து பகிரங்க விவாதம் நடத்தவும் தயாராக உள்ளேன்.

 

 150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டவர் பிரதமர் மோடி. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதுகுறித்த ஆய்வுக்குத்தான் அனுமதி அளித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக இன்று(6ம் தேதி) நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அதை ஆதரிப்பதில் தவறில்லை’’என்றனர்.

 பாஜக மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

pon radhakrishnan meets rajini in kanniyakumari

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

 

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு அவரைப் பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிகளில் கூடிவிட்டனர். பின்பு ரஜினியைக் காரில் கண்டதும் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். பின்பு திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் கெட்டப்புடன் 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன் என ரஜினி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இந்த நிலையில் இப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துவருவதாக தெரிகிறது. ரஜினியை பாஜக-வை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

 

 

 

Next Story

“முதன்மைக் கட்சியாகும் பயணத்தைத் துரிதப்படுத்தியுள்ளோம்” - பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"What people have benefited from Prime Minister's schemes, plans have been made to feed the people" Pon. Radhakrishnan

 

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கை இலக்காகக் கொண்டு பணிகள் பகிரப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பிரதமரின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து தமிழக மக்கள் எந்த அளவிற்குப் பயன்பெற்றுள்ளார்கள் என்பதைத் தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் அடித்தளம் அமைக்கும் வகையில் பாஜகவின் பார்வை ஆழமாகச் சென்றுள்ளது. 

 

அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநிலத் தலைவரின் கருத்துகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியேதான் தொடர்கிறது. அனைத்துக் கட்சிகளின் நோக்கமும் முதன்மைக் கட்சிகளாக வரவேண்டும் என்பதுதான். பாஜகவின் நோக்கமும் அதுதான். அதை நோக்கிய பயணத்தைத்தான் துரிதப்படுத்தியுள்ளோம்” என்றார்.