ponraj twit

Advertisment

“கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்...” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் சொன்னார் அல்லவா? இதுகுறித்து அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமைகாட்டி வெ.பொன்ராஜ், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

‘அலட்சியம், அறியாமை, திறமையின்மையால்,மக்களை கரோனாவிடமிருந்து காப்பாற்ற இயலாமல், கடவுளிடம் தள்ளிவிட்டார் முதல்வர்.

இது கடவுள் கொடுத்த வாய்ப்பு! கரோனாவிடமிருந்து மக்களைகாப்பாற்றுவேன் என்று சொன்னார் அல்லவா, மக்கள் தலைவன்?’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், பொன்ராஜ்.