Skip to main content

இறக்கும் தருவாயிலுள்ள கரோனா நோயாளிகளை காப்பாற்றுவீர்களா? -பிரதமருக்கும், முதல்வருக்கும் பொன்ராஜ் கேள்வி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
 Ponraj question for Prime Minister and CM!


“இந்திய பிரதமர் நரேந்திரமோடி,  இஸ்ரேல் புளூரிஸ்டெம் PLX மருந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இறக்கும் தருவாயில் உள்ள கரோனா நோயாளிகளைக்  காப்பாற்றுவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் வெ.பொன்ராஜ். 

“கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் ஏற்பட்டு மரணமடையும் இளைஞர்கள், பல்லுறுப்பு பாதிப்பு அடைந்த முதியோர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெருகுகிறது.” என்று  வேதனையை வெளிப்படுத்திய அவர், “நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக மேக்ரோபேஜ் எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்து சார்ஸ்-என்-கோவ்-2 வைரஸ் மீது அதிகமாக தாக்க தொடங்கும்போது ஏற்படும் இன்பிளமேசன் என்று சொல்லக்கூடிய அழற்சியினால் வீக்கம் ஏற்படுகிறது. அது மூச்சுத் திணறலுக்கு வழி வகுக்கிறது. அதனால்,  வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. 

 

 Ponraj question for Prime Minister and CM!

 

சில நேரங்களில் இரத்த உறைவு ஏற்படுகிறது, அதனால் நரம்புகளில் இரத்த செல்களினால் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடனடி மரணம் ஏற்படுகிறது. இதை ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை நீர்த்து போக செய்யும் பாராசிட்டமால் மருந்துகள், இயற்கை மருந்துகளை ஆவி பிடிப்பதன் மூலம்,  ஆரம்ப நிலையில் கை கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நோய் முற்றிய நிலையில்,  இது கை கொடுத்து காப்பாற்றுமா? என்று தெரியவில்லை. 

இந்த கரோனா நோய் முற்றிய நிலையில் இருந்து, பல்லுறுப்பு செயல் இழந்த முதியவர்களை காப்பாற்றி இருக்கிறது,  இஸ்ரேலின் பிளசண்டா நீட்டிக்கப்பட்ட செல் மருந்து. இது,  கடந்த 2 மாதத்தில் 3 நிலை நோய் சிகிச்சை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து விட்டது.   இந்த PLX சிகிச்சை முறையை கேட்கும் மற்ற நாடுகளுக்கு கொடுப்பதற்கு, இஸ்ரேல் தயாராக இருக்கிறது. 

வழக்கம்போல, ICMR & MODI GOVT ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை பக்கவிளைவுகள் அதிகம் என்று தாமதப்படுத்தி, ஏற்றுமதி செய்து விட்டு 60 நாள் கழித்து,  HCQ மருந்தால் பக்க விளைவுகள் இல்லை என்று சொல்லும் அவலத்தைப்போல, இதையும் தாமதப்படுத்தாமல்,  இஸ்ரேல் பிரதமர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  வாழ்த்து சொன்ன பிரதமர், உடனடியாக இஸ்ரேல் புளூரிஸ்டெம் PLX மருந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இறக்கும் தருவாயில் இருக்கும் கரோனா நோயாளிகளைக் காப்பதற்கு முன்வர வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் முன்னெடுக்க வேண்டும்.” என ஆதங்கப்பட்டு “இவர்கள் எப்போது விழித்து மக்களைக் காக்கப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.” என்கிறார் எதிர்பார்ப்புடன். 

உலகத்தையே உலுக்கும் கரோனா வைரஸிடமிருந்து நாட்டு மக்கள் விரைந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமாகவும் உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.