Skip to main content

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021
hb


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 33 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.

 

தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரோனா தொற்று காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயதரணி உள்ளே; பொன்னார் வெளியே! - பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Pon Radhakrishnan setback in BJP due to Vijayadharani arrival

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து இலவு காத்த கிளியாக இருந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் இணைந்தால் ஜெ.பி.நட்டாவை சந்திப்பது வழக்கம்.

அதேபோல் விஜயதாரணியும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது புதிதாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவோ அணை கட்டிப் பார்த்தும் செல்வப் பெருந்தகைக்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த விஜயதாரணி, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. புலி வருது புலி வருது கதையாய், கடந்த ஒரு மாதகாலமாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த விஜயதாரணி கட்சித் தாவல் கதைக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட்டுள்ளது.

இதன்பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பாஜக பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.கவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மறுபுறம் பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்த விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட்  தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதில் நான் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையில், மக்களுக்கு நல்ல பரிட்சயமான தலைவராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், அவருக்கு கவர்னர் பதவி தேடிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் கவர்னர் பதவியை பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இன்னொரு தரப்பினர், மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பொன்னாரை ஓரங்கட்ட நடக்கும் அரசியல்தான் இது என்றும் கமலாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிடும்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.