ADVERTISEMENT

காங்கிரஸ் கூட்டணி ஓட்டுக்கு நோட்டு கொடுத்து பழகிய கூட்டணி-பொன்.ராதாகிருஷ்ணன்

06:15 PM Mar 21, 2019 | manikandan

பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் குமாி மாவட்ட முக்கிய நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அப்போது செய்தியாளா்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,

ADVERTISEMENT

குமாி மாவட்ட மக்களுக்கிடையே உள்ள 37 ஆண்டுகால பகை இந்த தோ்தல் மூலம் முடிவுக்கு வருகிறது. முன்னேற்றம், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அடிப்படையை கொண்டு பா.ஜ.க ஜாதி, மதம் பாா்க்காமல் எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கன்னியாகுமாி தொகுதியில் தோ்தலை சந்திக்கிறது.

ADVERTISEMENT

5 ஆண்டுகளில் குமாி மாவட்டத்துக்கு மோடி 40 ஆயிரம் கோடி திட்டங்களை தந்து 50 ஆண்டு காலத்திற்கான கட்டுமான பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்து 5 ஆண்டுகளில் தொழில் வளா்ச்சி மாவட்டமாக குமாியை மாற்றி காட்டுவோம். இங்குள்ள ஓவ்வொரு இளைஞா்களும் முதலாளியாக மாறவேண்டும். 70 கி.மீ தூரமுள்ள நான்கு வழிச்சாலைகளில் ஓண்ணரை ஆண்டுகளில் 10 கி.மீ தூரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு விடக்கூடாது என்று கோா்ட் மூலம் தடை உத்தரவு வாங்கியிருக்கிறாா்கள்.

பா.ஜ.க கூட்டணி ஏழைகளுக்கு கொடுத்து கொடுத்து கரம் சிவந்த எம்.ஜி.ஆா் கூட்டணி. காங்கிரஸ் கூட்டணி என்பது ஓட்டுக்கு நோட்டு கொடுத்து பழகிய கூட்டணி. வீட்டுக்கு நூறு இருநூறு நோட்டுக்கள் வேணுமா அல்லது வீட்டுக்கு ஓரு எம்.பி வேணுமா என்று மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT