Advertisment

பொன்பரப்பி: பெண்கள் சாலை மறியல்: இருபிரிவினர்களிலும் 50 பேர் மீது வழக்கு

அரியலூரில் இருப்பிரிவனருக்கிடையே நடந்த தாக்குதலில் தலித் அல்லாதவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி, ''தலித்துகள்தான் வன்னியர்களை தாக்கினார்கள்.ஆனால் காவல்துறையோ தலித்துகளைவிட்டு வன்னியர்கள் மீது நடவட்டிக்கை எடுக்கிறார்கள்'' என்றுகாவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

Ponparappi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனை தொடர்ந்து தலித் அல்லாத பெண்கள், தலித்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டி.எஸ்.பி. இளஞ்செழியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன் பின் காவல்துறை இரு பிரிவினர்களிலும் 25 பேர், 25 பேர் என மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisment

Ponparappi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 செய்தியாளர் கலைவாணன் கடுமையாக தாக்கப்பட்டார். இவர் சிகிச்சிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர், தலித் கட்சி விவசாய அணியைச் சேர்ந்த கருணாநிதி உட்பட 6 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறை அவர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. கலைவாணன் தாக்கப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை மாலை அரியலூர் பகுதி பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

pmk vck ariyalur district ponparappi Ponparappi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe