Advertisment

நலம் பெற்று வீடு திரும்பினார் "பொன்னீலன்"

மக்களின் வாழ்வியல் எதார்த்தத்தை சமூக பார்வையுடன் இலக்கியமாக படைக்கும் முற்போக்கு எழுத்தாளர்களில் தனித்துவமானவர் நாவலாசிரியர் பொன்னீலன். கல்வித்துறையில் உயர் பொறுப்பு வரை பணியாற்றி ஒய்வு பெற்றவர். ஒய்வுக்கு பிறகு அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் மணிகட்டிபொட்டல் என்ற கிராமத்தில் அவரது துணைவியாருடன் வசித்து வருகிறார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி மூத்தவர் குமரி மாவட்டம் களியகாவிளை என்ற ஊரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இளையவர் குடும்பத்துடன் சேலத்தில் வசிக்கிறார்.

Advertisment

publive-image

பொன்னீலனின் வரலாற்றுப் படைப்பு "புதியதரிசனங்கள்" என்ற நாவல். இந்நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் பொன்னீலன். கரிசல் போன்ற நாவலுக்காக தமிழக அரசு விருது பெற்றார். 81 வயதான அவரை இடதுசாரி இலக்கிய உலகம் அன்புடன் "அண்ணாச்சி" என அழைப்பதுண்டு.

இந்நிலையில் சென்ற 15-ஆம் தேதி அதிகாலை பொன்னீலனுக்கு உடல் நலம் குன்றியது இதனால் குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் இருதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது அப்போது இருதயத்தில் இருந்த அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டது.

Advertisment

ஒரு அடைப்புக்கு ட்டன்ட் பொருத்தப்பட்டு மற்ற இரண்டு அடைப்பு களுக்கும் மருந்து மூலம் சரியாக பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னீலன் முழுமையாக நலம் பெற்று இன்று 20ஆம் தேதி மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது மூத்தமகள் வசித்துவரும் களியக்காவிளை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழகத்தில் முற்போக்கு இலக்கியவாதிகளில் முதன்மையானவராக உள்ள பொன்னீலனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இலக்கியவாதிகள் மத்தியில் துயரத்தை கொடுத்தது. ஆனால் அவர் முழு நலம் பெற்று வீடு திரும்பியது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

writer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe