Skip to main content

'பொன்னியின் செல்வன்' டீசரை வெளியிடும் முன்னணி நடிகர்கள்- விரிவான தகவல்! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

'Ponniin Selvan' Teaser Releasing Lead Actors- Detailed Info!

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் செப்டம்பர் 30- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

 

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் டீசர் இன்று (08/07/2022) மாலை 06.00 மணிக்கு ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் மொழியின் டீசரை நடிகர் சூர்யாவும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் மகேஷ் பாபுவும், இந்தி டீசரை நடிகர் அமிதாப் பச்சனும் வெளியிடுகின்றனர். அதேபோல், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் ரக்சி ஷெட்டியும் வெளியிடுகின்றனர்.  


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் மோகன்லால்

 

mohanlal to act in sivakarthikeyan movie under ar murugadoss direction

 

'மாவீரன்' படத்தைத் தொடர்ந்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் 2024 பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. 

 

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க, பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாகத் துப்பாக்கி படத்தில் மிரட்டிய வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு பான் இந்திய படமாக இப்படம் உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

 

 

Next Story

பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் கமல் படம்

 

kamal nayagan re release update

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கபட்டு வருகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இதில் கமலுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்க இளையராஜா இசையமைத்திருந்தார். முக்தா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. மேலும் 60வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீசாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புதிய ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே கன்னடத்தில் மட்டும் டப் செய்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீசானது. கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியாகவுள்ள நாயகன் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் கமலின் 234வது படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.