Advertisment

காவல்துறை ரோந்தால் தடுக்கப்பட்ட பயங்கர கொலை! 

Ponnery police arreste seven people including one minor

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் கும்பல் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அவர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisment

அப்போது பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவரைக் கொலை செய்யத்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முரளி (28), அரக்கோணத்தைச் சேர்ந்த சசிகுமார் 20, திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (24), செங்கல்பட்டைச் சேர்ந்த பிரகாஷ் (19), முகிலன் (22), பொன்னேரியை சேர்ந்த அகத்தீஸ்வரன் (21), செங்கல்பட்டைச்சேர்ந்த 15 வயது சிறுவன் என 7 பேரை கைது செய்து பொன்னேரி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

police thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe