Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் மே 07 அன்று சில கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கூட் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்குவதற்காக மது பிரியர்கள் கரோனா தொற்று ஏற்படலாம் என்பதை மறந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக மிக நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.