மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Ponnathirakaran interview

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பொன்.இராதாகிருஷ்ணன்,

தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசி சம்மதம் பெறவேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சி தலைவரை பெங்களூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். ஏன் இரட்டை வேடம் போடுகின்றனர்.

கர்நாடகாவுக்கு சென்று முதல்-மந்திரியிடம் பேச மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். அவர்கள் செல்ல தயாரா?. இவ்வாறு அவர் கூறினார்.

Ponnathirakaran interview
இதையும் படியுங்கள்
Subscribe