கடந்த மாதம் 16 ந் தேதி முதல் ஒரு ஆடியோவால் பொன்னமராவதி முழுவதும் பரபரப்பாகவும், போராட்டமாகவும் இருந்தது.ஒரு வாரத்திற்கு பிறகு ஆடியோவில் பேசியவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் என்று சிங்கப்பூரில் இருந்து சிலரை வரவழைத்து கைது செய்தனர். அதேபோல பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதியில் இருந்தும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்நிலையில்பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்துசர்ச்சை ஆடியோ வெளியிட்டவிவகாரத்தில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டசெல்வகுமார், வசந்த், சத்யராஜ், ரங்கையா ஆகிய 4 பேரும் தற்போதுகுண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி பரிந்துரைத்ததின் பேரில்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்குகுந்தகமாக செயல்படுவதை கட்டுப்படுத்தும் பொருட்டுஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.