Ponmudi's assets are frozen

அமைச்சர் பொன்முடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பான வழக்கில் அரசுக்கு 28.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இதற்கு முன்பே அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து ஜாமீனில் அவர் வெளியே வந்திருந்தார்.

இந்நிலையில் அமலாக்கதுறையின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தற்போது அமைச்சராக உள்ளபொன்முடியின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொன்முடியின் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணியின்சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment