நல்லோர்க்கூடம் என்ற திட்டத்தின்படி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தினமும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நல்லோர்க்கூடம் என்ற திட்டத்தின்படி, 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து, ஒரு வேலை உணவிற்காக அல்லாடும் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக, விழுப்புரம் வள்ளலார் சன்மார்க்க சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் சமூக நல அமைப்புகள்சேர்ந்து தினமும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ துவங்கி வைத்தார். மேலும் அவர் கழகத் தலைவர் ஆணையை ஏற்று தினமும் சுமார் 3000 ஏழை, எளியவர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.