Ponmudi cried; Udhayanidhi expressed his condolences

Advertisment

அமைச்சர் பொன்முடியின் தம்பியான தியாகராஜன் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவராவார். கடந்த சில நாட்களாக தியாகராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மருத்துவர் தியாகராஜனுக்கு பத்மினி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மருத்துவர் தியாகராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மருத்துவர் தியாகராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலினிடம் தம்பியை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி கதறி அழுதார். அவருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.