style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழகத்தில் இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகத்தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பலர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான க.பொன்முடி எம்எல்ஏ பார்வையிட்டு மருத்துவக்கல்லூரி டீனைச் சந்தித்து உலகையே அச்சுறுத்தும் கொரனோ வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காவல்துறையினருக்கே முகக்கவசம், கிருமிநாசினி, கைகழுவும் உபகரணங்கள் வழங்குவதில்லை, மருந்தகங்களில் மிகவும் தட்டுப்பாடு உள்ளது எனப் பல்வேறு குற்றம் சாட்டினார். மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு கொரனோ வைரஸை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.