Advertisment

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து...!

பொங்கல் தினத்தை தமிழர்கள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி, தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இதற்கிடையில் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

PongalFestival- rajinikanth bless

இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ரசிகர்கள் பெரும்திரளாக திரண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்துப் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் 'தலைவா... தலைவா...'ஆரவாரம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்' என தெரிவித்தார்.

Advertisment
rajinikanth pongal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe