Advertisment

கோழிக்கமுத்தியில் களைகட்டிய யானை பொங்கல்

Pongal, the weeding elephant in kovai

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை தொடர்பான பல்வேறு பணிகளுக்கு முகாமில் உள்ள யானைகள் உதவியாக இருக்கும் நிலையில், யானைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 'யானை பொங்கல் விழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இன்று அதன்படி யானை பொங்கல் விழா நடைபெற்றது. யானைகளை குளிப்பாட்டி பொட்டு இட்டு மரியாதை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்துமலைவாழ் மக்கள் முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து யானையைவழிபட்டனர். யானைகளுக்கு பிடித்த கரும்பு, கொள்ளு, ராகி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் யானை முகாமில் உள்ள யானைகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisment

elephant Festival kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe