Pongal program beyond 10 pm- police baton

கடலூர் மாவட்டம் புவனேகிரி அருகே காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேலாக காணும் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றதால் போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளக.ஆலம்பாடி கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிறிய அளவில் மேடை அமைத்து அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். பொங்கல் நிகழ்ச்சிக்கு இரவு பத்து மணிக்கு மேல் அனுமதி இல்லை என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் பத்து மணிக்கு மேலாக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Advertisment

இதனால் போலீசார் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென போலீசார் தடியடி நடத்தினர். காவல் துறையினர் தங்களை சரமாரியாக தாக்கியதாக இரவு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் திரண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினரின் வாகனங்கள் வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர். உடனடியாக தகவலறிந்து சிதம்பரம் டிஎஸ்பி அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.