ADVERTISEMENT

பொங்கல் பரிசு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

11:21 AM Dec 21, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கும் வகையில் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இருப்பாளியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல் ரூபாய் 2,500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் துவங்கும்" எனth தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கி வந்த நிலையில், இம்முறை இது ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT