nn

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரேசன் கார்டுகளுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, பன்னீர் கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ 1000 பணத்தை, நிதி நிலையை காரணம் காட்டி இந்த ஆண்டு வழங்கவில்லை.

Advertisment

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தற்பொழுது தொடங்கி வைத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். பொங்கல் தொகுப்போடு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இதன் மூலம் 2 கோடி 20 லட்சத்து 94 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

.