Advertisment

29 ஆம் தேதிமுதல் பொங்கல் பரிசு- எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்கள்ளக்குறிச்சி புதியாக மாவட்டமாக செயல்பாட்டுக்கு வர ஆயத்தமாகி அதற்கான தொடக்க விழா நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

Advertisment

Pongal prize on 29th - Edappadi starts

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றும்போது, போன வருடம் புயல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நல்ல மழைபொழிந்து செழிப்பாக உள்ளது தமிழகம். எனவே பொங்கலுக்கு ஏதெனும் பரிசு அறிவிப்புஇல்லையா என செல்லும் இடங்களில் மக்கள் கேட்கிறார்கள்.

இந்த மேடையில் சொல்லுகிறேன், போன வருடம் போன்றே இந்த வருடமும் பொங்கலுக்குஒரு கிலோ பச்சை அரிசி, முந்திரி, திராட்சை,கரும்புஆகிய பொங்கல் தொகுப்புடன் அரிசி ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

Advertisment

Pongal prize on 29th - Edappadi starts

இதனையடுத்து இன்று காலைஅரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்க 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் அந்த திட்டம் தொடங்க இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டதை தலைமை செயலகத்தில் வரும் 29 ஆம் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

admk edappadi pazhaniswamy pongal gift
இதையும் படியுங்கள்
Subscribe