பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்... முதல்வர் இன்று தொடங்கிவைப்பு!

hj

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்டம், இருப்பாளியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல் ரூபாய் 2,500 திட்டம் அமல்படுத்தப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் துவங்கும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe