Advertisment

hjk

பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் 'பொங்கல் சிறப்புத் தொகுப்பு' அறிவிக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த சில வாரங்களாக வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகக் கூறி எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இதுதொடர்பாக தமிழக அரசைக்குற்றம் சாட்டியிருந்தது.

Advertisment

இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "அதிமுக வடிகட்டிய பொய்களை அவிழ்த்துவிடுகிறது. பொருட்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியில் வாங்கிதைவிட குறைவான கொள்முதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அதிமுகவின் குற்றச்சாட்டு அபத்தமானது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.