Advertisment

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு நிறைவு!

 Jallikattu completed in Trichy Suriyur!

Advertisment

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

அதேபோல் திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தற்போது நிறைவு பெற்றது. போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 காளைகளை அடக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் முதல் இடம் பெற்றுள்ளார். அவருக்கு பரிசாக இருசக்கர வாகனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 காளைகளை பிடித்த திருச்சி பூலாங்குடியை சேர்ந்த மனோஜ்க்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம்(29) எனும் வீரர்,காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

thiruchy jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe