Advertisment

ஈரோட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை... அமைச்சர் தொடங்கிவைப்பு..!

Pongal gift for ration card holders in erode

ஈரோடு மாவட்டம், பவானியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய்,இலவச வேட்டி, சேலை, கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கான தொகுப்பினைஅமைச்சர் கருப்பணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன் “கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பெருந்துறை அரசு மருத்துமனை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது உடல் நிலையைக் கவனித்து வருகிறோம்" என்றார்.

Advertisment

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe