Advertisment

பொங்கல் பரிசுத் தொகுப்பு; அடுத்த அறிவிப்பை வெளியிட்ட அரசு

Pongal Gift Package will be distributed from jan 10th

Advertisment

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று(05/01/2024) இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ. 1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் எனத்தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்படவுள்ள நிலையில், 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், 13 ஆம் தேதி பரிசுத்தொகுப்பினை பெற முடியாதவர்கள் 14 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe