/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2510.jpg)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கள் பரிசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் வழங்க உள்ளது. அதைப்போன்றே அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படியைத் தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு உயர்த்தியுள்ளது. அதன்படி இதுவரை வழங்கப்பட்டு வந்த 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)