Skip to main content

பொங்கல் பண்டிகை... உச்சத்தில் காய்கறி விலைகள்...!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிரழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாகவே தலைப் பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கனிகள் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் வழக்கமான காய்கனிச் சந்தைகள் தவிர பல்வேறு பொது இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம்  பொங்கல் பொருள்கள் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.

 

Pongal Festival-Vegetable prices high

 



கரும்பு, பனைஓலை, பனங்கிழங்கு, அடுப்புகட்டி, மண்பானை, காய்கனிகள் உள்ளிட்டவைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இதே போல் பாளை, டவுண் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளிலும் காய் கனிகள் லாரிகளிலும், சிறிய வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.  பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 டன் அளவிற்கு காய்கனிகள் வந்து விற்பனையாகும். இது கடந்த சனிக்கிழமை 40 டன்னாக உயர்ந்தது. நேற்று முன்தினம் 70 டன்னாக உயர்ந்தது. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு 50 லட்சமாகும். நேற்று அதிகாலை முதல் 75 டன் அளவிற்கு இங்கு மட்டும் காய்கனிகள் வந்து குவிந்து விற்பனையாகின. 3 நாட்களில் இங்கு மட்டும் 185 டன் அளவிற்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சில காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்த சந்தையில் முருங்கைக்காய் 5 கிலோ அளவில் மட்டுமே நேற்று வந்தது. இதனால் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 180ஆக விற்கப்பட்ட நிலையில் நேற்று 200 ரூபாயாக உயர்ந்தது. வெளிச்சந்தைகளில் ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கத்தரிக்காயின் விலை கிலோ 110லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.125ஆக விற்கபடுகிறது. பல்லாரி விலை கிலோவிற்கு 65 ஆக உள்ளது.

 



மற்ற காய்கறிகளின் விலை(கிலோ) விபரங்கள் வெண்டைக்காய் 35, தக்காளி 28, புடலை 20, அவரை 65, பீர்க்கங்காய் 40, கொத்தவரை 24, பாகற்காய் (சிறியது) 50, பெரியது 24, மாங்காய் 130, இஞ்சி 74, பூசணிக்காய் 20, தடியங்காய் 15, சுரைக்காய் 12, கோவக்காய் 35, முள்ளங்கி 20, புதினா 35, கொத்தமல்லி 25, கருணை, சேனை, சேம்பு, சிறுகிழங்கு தலா 50, மரவள்ளி கிழங்கு 24, சீனி கிழங்கு 25 பனங்கிழங்கு (10 எண்ணம்) 60, தேங்காய் 42, உருளை 36, கோஸ் 24, பீட்ரூட் 40, சவ்சவ் 18. ரிங்பீன்ஸ் 76, பட்டர் பீன்ஸ் 170, பச்சைபட்டாணி 75, காலிபிளவர் 40 என்ற விலையில் விற்கப்படுகிறது. காய்கனிகளின் விலை உயர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக 100 கடைகள் மட்டுமே இயங்கும். கடந்த 3 தினங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு200 க்கும் மேற்பட்ட உழவர்கள் இங்கு கடைகள் அமைத்துள்ளனர். இதனால் தராசு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து 2 கடைகளுக்கு ஒரு தராசு கொடுக்கப்பட்டு சமாளிக்கப்பட்டது. சந்தை வளாகத்தில்  நடைபாதை  முழுவதும் கடைகளாக காட்சியளிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் கூட்டத்தையொட்டி விலையை அவ்வப்போது வியாபாரிகள் மாற்றுகின்றனர். நேற்றிரவு ஒரு கட்டு கரும்பு 250 என விற்கப்பட்டது. அதுவே நேற்று காலை 300 ஆக உயர்ந்தது. இதேபோல் ஒரு பனை ஓலை 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சேற்றில் குளித்து சிலம்பம் சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்.. வியக்க வைக்கும் திருவிழா!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.

பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.