pongal festival special trains southern railway

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவை ஆகிய மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பகல் 02.45 மணிக்கு நாகர்கோவிலிருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜனவரி 13-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜனவரி 17-ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Advertisment

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (10/01/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கும்" என தெரிவித்துள்ளது.