jallikattu tamilnadu government released the gazette notification

சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, 'புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயபுரத்திலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டிலும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரிலும் ஜனவரி 15- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பொங்கல் பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நாளை (14/01/2021) ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.