pongal festival jallikattu cm, deputy cm gift announced

Advertisment

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு விதிமுறைகளுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் வெல்லும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.