Skip to main content

முன்னாள் மாணவர்கள் முயற்சியால் அரசு உதவி துவக்கப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமத்துவ பொங்கல் விழா...

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர்கள் முயற்சியால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருவது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

pongal celebrations by alumini in government school

 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ குண்டலாபாடி கிராமம் உள்ளது.  இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றை தாண்டி செல்ல வேண்டும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இப்பகுதி மக்கள் படகு மூலம் வந்து சிதம்பரம் மற்றும் நகர  பகுதிக்கு  செல்வார்கள். பள்ளி மாணவர்களும்  படகு மூலம் வந்து பள்ளிக்கு செல்வார்கள். இந்த கிராமம் கொள்ளிடம் கரையில் உள்ளதால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.

மேலும் இந்தப் பகுதியில் உள்ள   திட்டுகாட்டூர், அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் ஆகிய  கிராமங்கள் மழைகாலங்களில் தீவு போல் இருக்கும். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் முயற்சியின் பேரில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இப்படியுள்ள  இந்தகிராமத்தில்  பழமை வாய்ந்த அரசு உதவிபெறும் ராசப்பன் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்   கல்வி பயின்ற மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு வந்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும் நண்பர்களின் உதவியால் நடப்பு ஆண்டுகளில் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தனியார் பள்ளிக்கு இணையாக செய்து வருகிறார்கள். இது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

pongal celebrations by alumini in government school

 

இதனிடையே  இந்த ஆண்டும் சமத்துவ பொங்கல் விழா  கீழகுண்டலபாடி துவக்கபள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பள்ளியின் முன்பு கரும்பு மற்றும் தோரணங்கள் அமைத்து பொங்கலிட்டு மாணவர்களுக்கு வழங்கினார்கள்.  இதனைத் தொடர்ந்து சீர்காழியிலுள்ள மருத்துவ தம்பதியினர்  பாலாஜி, வானதி ஆகியோர் பள்ளியில் பயிலும்  மாணவ மாணவிகள் 200 பேருக்கு  பரிச்சை அட்டை, பேனா, நோட், டிபன் பாக்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், பள்ளிக்கு குடிநீர் கேன், இனிப்பு உள்ளிட்ட  பொருட்களை வழங்கினார்கள். 

இதேப்பகுதியில் உள்ள பெராம்பட்டு, அக்கரைஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வி உபரகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், சமூக ஆர்வலர் யாமினி, திட்டுகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.  பின்னர் மாணவர்கள் 200 பேருக்கும் தென்னங்கன்று வழங்கப்பட்டது.  இதனை நன்கு வளர்த்து வருபவர்களுக்கு ரூ 1000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.