Advertisment

கருணை இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்..!

Pongal celebration at perambalur

பெரம்பலூர், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 90 நபர்கள் தங்கியிருக்கும் வேலா கருணை இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

விழாவில் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர்டாக்டர். கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் செயலர். டாக்டர். மித்ரா கலந்துகொண்டார். நன்கு படித்து நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் சூழ்நிலை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து,கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் இவர்களோடு இணைந்து நாங்களும் உங்கள் உறவுதான்என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் செய்து மகிழ்ச்சியுடன் ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் அமராவதி, ரங்கராஜ், டான் அறக்கட்டளை களப்பணியாளர்கள், கிறிஸ்டியன் கல்வி நிறுவன ஆசிரியர்கள் கார்மேகம், மோகன்ராஜ், கீதாலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Perambalur pongal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe