Skip to main content

"பொங்கல் விழா என்ற பெயரில் காய்ச்சி எடுக்கின்றனர்!"- சிறை பணியாளர்களின் குமுறல்!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, மத்திய சிறைகளுக்கு தலா ரூ.50000, மற்றும் மாவட்ட சிறை/பார்ஸ்டல் பள்ளிக்கு (புதுக்கோட்டை) ரூ.25000 என, தமிழ்நாடு சிறைப்பணியாளர்கள் நல நிதியிலிருந்து நிதி வழங்கிட சிறைத்துறை தலைவரும் கூடுதல் காவல்துறை இயக்குநருமான ஆபாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.  அந்த ஆணையில் (எண் 00891/ஐ.சி.1/2020), மத்திய சிறை வளாகப் பணியாளர்கள் குடியிருப்பில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடத்திட, இந்த நிதியிலிருந்து செலவு செய்யுமாறு சிறை கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Pongal Celebration-Jail Staff Sadness

 



“சிறைப் பணியாளர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டும்  என்ற நல்ல நோக்கத்துடனே, பொங்கல் விழாவும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதாகச் சொல்கிறார், ஏடிஜிபி ஆபாஷ்குமார். ஆனால், அதற்கு நேர்மாறாகவே எல்லாம் நடக்கிறது..” எனப் புலம்பும் சிறைப் பணியாளர்கள், “மதுரை மத்திய சிறை வளாகப் பணியாளர்கள் குடியிருப்பில் சுமார் 70 வீடுகளுக்கும் மேல் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் யார் யார் தங்களின் வீட்டைச் சரியாகப் பராமரித்து வருகிறார்களோ, அவர்களுக்கே பரிசாம். சிறை அதிகாரிகள் வீடுகளைப் பார்வையிட வருவார்களாம். இப்படிச் சொல்லியே, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எங்களை வேலை வாங்கி வருகிறார்கள்.

அதனால், வீட்டுக்கு  வெள்ளையடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையிலேயே,  ஒரு சிறைப்பணியாளர் ரூ.7000 வரை செலவழிக்க வேண்டியதாகிவிட்டது.  இந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நிதி பெறும் வழியிருக்கிறது. இந்த அதிகாரிகளோ, அதற்கான நடவடிக்கையில் இறங்காமல், எங்கள் சொந்தப் பணத்திலிருந்து வீடுகளைப் பழுது பார்க்க வைத்துவிட்டார்கள். அதனால்,  மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யவேண்டும் என்ற நோக்கமே சிதைந்து, கூடுதலாக எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது” என்று நொந்துபோய்ச் சொல்கிறார்கள். மதுரை மத்திய சிறையில் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளிலுமே சிறை பணியாளர்கள், இதே ரீதியில்தான் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  
 
  

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Next Story

இம்ரான்கானுக்கு 24, மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Imran Khan wife bushra bibi sentenced to 14 years in prison

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று (30-01-24) இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை இன்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்ததோடு, இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபர் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு தற்போது பரிசுபொருட்கள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.