Advertisment

சமத்துவப் பொங்கல் விழா; நெகிழ்ந்து போன மாணவிகள்

pongal celebrated in pudukkottai district government school

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தை திருநாளை வரவேற்க சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் பொங்கல் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் அதிகமான மாணவிகளை மருத்துவம் படிக்க வைத்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் சமத்துவப் பொங்கல் நடைபெறுவது போல இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisment

pongal celebrated in pudukkottai district government school

பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டனர்.பிறகு படையலிட்டு தலைமை ஆசிரியர் குகன் தீபம் காட்டிய பிறகு ஆயிரம் மாணவிகளையும் ஒரே இடத்தில் அமர வைத்து அனைவருக்கும் தலைவாழையிலையில் பொங்கலைவைத்துஆசிரியர்கள்மாணவிகளுக்குவிருந்து பரிமாறினார்கள். தாயுள்ளத்தோடு ஆசிரியர்கள் வாழை இலையில் பொங்கல் பரிமாறியதாக மாணவிகள் நெகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்துமாணவிகளுக்கான கோலப்போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று வண்ண வண்ணக் கோலங்களைத்தீட்டி பள்ளி வளாகத்தைமேலும் அழகாக மாற்றினார்கள்.

pongal puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe