பொங்கல் புத்தகத் திருவிழா வெள்ளியன்று (ஜன.8) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே உள்ள பிமேக் எக்ஸ்போ ஹாலில் தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சியை ஐ.ஏ.எஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சென்னை வாசகர் வட்டம் நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சி ஜன.18ந் தேதி வரை நடைபெறும். வாசகர்களுக்கும், வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் இல்லை. தினசரி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை புத்தக விற்பனை நடைபெறுகிறது. 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்60 அரங்குகளைக் கொண்ட புத்தகக் காட்சியில் 40 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.
நக்கீரன் பதிப்பகம், காலச்சுவடு, கிழக்குபதிப்பகம், பாரதி புத்தகாலயம், சாகித்ய அகாதெமி, தமிழ் இந்து, பாரதி புத்தகாலயம், தேசாந்திரி, பெரியார் சுயமரியாதை புத்தக நிறுவனம் உள்ளிட்ட பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. புத்தகங்களுக்கு 10 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களின் புதிய வெளியீடுகளும் முழுமையாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி தொடக்க விழாவிற்கு பதிப்பாளர் சேதுசொக்கலிங்கம் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தொடங்கி வைக்க நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். சென்னை வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் க.நாகராஜன், கே.எஸ்.புகழேந்தி, மு.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரங்கில்நக்கீரன் பதிப்பகம் கடை எண்- 4-ல் அமைந்துள்ளது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/tfutru.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/ytgiyti.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/dryyre.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/ytiyt.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/gjytuyt.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/ftyhtrytr.jpg)