Advertisment

புதுச்சேரி  மின் துறை ஊழியர்கள் போராட்டம்

p

ஊதியத்தை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Advertisment

புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கக்கூடாது, ஒரு நபர் சிபாரிசு அடிப்படையிலான ஊதியத்தை உறுதிபடுத்தவேண்டும்,மின்மீட்டர் கணக்கீட்டுபணியை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து மின் துறை ஊழியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் 1500 பேர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள தலைமை மின்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களின் மின்துறை தலைமை அலுவலகங்களிலும் நடைபெற்று வருகின்றது. ‘மின்துறை நிர்வாகமும், புதுச்சேரிஅரசும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்’ என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக மின்பராமரிப்பு மற்றும் மின்சீரமைப்பு பணிகளும், நாளொன்றுக்கு வசூலாகும் 5 கோடி ரூபாய் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

pondichery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe