Advertisment

மாமூல் கேட்டு மிரட்டியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல்;ரவுடியை கைது செய்யக்கோரி வில்லியனூரில்  கடையடைப்பு

புதுச்சேரி அருகே மாமூல் கேட்டு மிரட்டியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை கைது செய்யக்கோரி வில்லியனூர் பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

Advertisment

c

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியை சேர்ந்த சிவா, பாபு சகோதரர்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சாந்தமூர்த்தி என்ற ரவுடி நேற்று இரவு மாமூல் கேட்டு கடையில் மிரட்டி உள்ளார். மேலும் கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் கடையில் இருந்த ஊழியரை தாக்கினார்.

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 போலீசார் ரவுடி சாந்தமூர்த்தியை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களையும் (போலீசாரையும்) தகாத வார்த் தைகளால் திட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான் ரவுடி.

c

இச்சம்பவம் தொடர்பாக மளிகை கடையின் உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிசார், தப்பியோடிய ரவுடி சாந்தமூர்த்தியை தேடி வருகின்றனர்.

இதனிடையே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை கைது செய்யக்கோரி இன்று வில்லியனூர் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு செய்தனர். அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிகள் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், தர மறுத்தால் தகராறு செய்வது தொடந்து நடப்பதாகவும் கூறும் வியாபரிகள் ரவுடிகளின் கொட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

pondichery camera
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe