Advertisment

 நியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்-  நாராயணசாமி பேட்டி!

n

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில பாஜக தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்யாத சூழலில் ஆளுநர் மாளிகையில் தாமாகவே முன்வந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 2017 ஜூலை 4 ம் தேதி இரவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல், சட்டப்பேரவை செயலகத்துக்கு வரவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பிய கடிதம் சட்டசபை செயலகத்தை கட்டுப்படுத்தாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து 3 நியமன எம்எல்ஏ-க்களையும் சட்டப்பேரவைக்குள் வரவும் தடை விதித்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து பரப்பரப்பான இவ்வழக்கில் நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் 07-ஆம் தேதி உறுதி செய்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் பல்வேறு சட்டசிக்கல்களும் நிறைய ஓட்டைகளும் உள்ளது.

நியமன உறுப்பினர்கள் விவகார தீர்ப்பில் சட்ட வல்லுநர்களை கலந்து பேசி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Narayanasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe