புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் (78) உடல்நல குறைவு காரணமாக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (10.06.2019) அதிகாலை 3.00 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை 11.06.2019 காலை 7.00 மணிவரை வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், தின்டிவனம் தாலுக்காவில் உள்ள அவரது சொந்த ஊரான ஆலத்தூரில் நாளை (11ம் தேதி) காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.