Advertisment

இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காதலன் கைது!புதுச்சேரியில்  பரபரப்பு

புதுச்சேரி அடுத்து பொம்மையார்பாளையம் பகுதியிலுள்ள முந்திரி தோப்பில் கடந்த 30-ஆ ம் தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ஆரோவில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

Advertisment

மேலும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அங்கு மது பாட்டில்கள் கிடப்பதை கண்டு பிடித்து எடுத்தனர். போலீஸ் மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு சோதனையிடப்பட்டது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் தமிழக பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

m

இதில் கோரிமேடு பகுதியில் காணாமல் போன ஒரு பெண்ணாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அவரது தாயார் மற்றும் சகோதரியை அழைத்துவந்து அடையாளம் கண்டனர். இதில் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மரக்காணத்தை அடுத்த கூனிமேடு எம்ஜிஆர் நகரில் காணாமல் போன மற்றொரு இளம் பெண்ணின் தாயாரை அழைத்துச் சென்று சடலத்தை காவல்துறையினர் காண்பித்தனர். அதில் அவர் அணிந்திருந்த நகை உடை உள்ளிட்டவைகளை அடையாளம் காண்பித்ததில் இறந்தது லட்சுமி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் லட்சுமி புதுச்சேரியில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது கடையில் வேலை செய்த அருண் என்பவர் லட்சுமியை காதலித்து அவரை கர்ப்பமாக்கியதாகவும் கூறப்பட்டது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லட்சுமி வற்புறுத்தியதால் சம்பவத்தன்று பொம்மையார்பாளையம் அருகே உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்று, கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் அருண் லட்சுமியை அழைத்துச் சென்றதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து லட்சுமி கொலையில் அவரது காதலனான அருணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

pondichery bommaiyarpalayam police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe