Advertisment

புதுச்சேரியில் சாலையின் நடுவே உள்ள பேரிகாடுகளை அகற்ற கோரியும் மறியல்!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையை மூடக் கோரியும், ஜெயமூர்த்திராஜா நகர் சந்திப்பில் (சன்வே ஓட்டல் எதிரில்) சாலை நடுவில் தடுப்புகள் வைத்ததால் ஜெயம் நகர்¸ அண்ணாலையார் நகர்¸ ஜெயமூர்த்திராஜா நகர்¸ இன்ஜினியர்ஸ் காலணி¸ திருப்பூர் குமரன் நகர், வேல்ராம்பட்டு ஆகிய பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த தடுப்புகளை அகற்ற கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Advertisment

p

இதனை அறிந்த முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.பாஸ்கர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் முதலியார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நேரில் வரவைத்து புகார் கூறினார். அதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தடுப்புகள் அகற்றப்பட்டது.

p

puthuchery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe