/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pondichery1.jpg)
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள சங்கோதியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த இரண்டு மகள்களுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்கள். மூன்றாவது மகள் தீபா. தீபாவுக்கு அடுத்த மாதம் 26-ஆம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pon_5.jpg)
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வெகு நேரமாகியும் வீடு திறக்காததால் அருகிலிருந்த உறவினர் ஒருவர் சன்னல் வழியே பார்த்தபோது பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரிந்தது. உடன் அக்கம் பக்கத்தவர்கள் வீட்டை உடைத்து திறந்து பார்த்தபோது பாலகிருஷ்ணன் தனது மனைவி வனஜாவையும், மகள் தீபாவையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடன் அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்து வந்த முதலியார்பேட்டை காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரசோதனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைகள் மற்றும் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாலகிருஷ்ணன் இதற்கு முன் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மனைவியையும், மகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்டதில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)