ADVERTISEMENT

 சாசன் மருந்து தொழிற்சாலையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் தர்ணா!  

08:14 PM Aug 13, 2019 | Anonymous (not verified)



புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ளது சாசன் தனியார் மருந்து தொழிற்சாலை. இங்கு 400-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் பல தொழிலாளர்களை திடீர் திடீரென வேலையை விட்டு நிறுத்துகின்றனர்.

இவற்றை கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் பேசுவதற்காக பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் தொழிற் சங்கத்தினரை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் கோரிக்கை மனு கொடுக்க தொழிற்சாலைக்கு சென்ற தொழிற்சங்கத்தினரையும், தொழிலாளர் களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.


இதனால் ஆவேசமடைந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தலைமையில் தொழிற்சாலை முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சங்கத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

அதையடுத்து தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று புதுச்சேரி மாநில தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT