புதுச்சேரி பல்கலையில் பேரணி நடத்தியவர்கள் மீது பட்டாசு வீச்சு! 

காஷ்மீர் மாநிலத்தில் 370-ஆவது பிரிவை நீக்கி, அம்மாநிலத்தை பிரித்த மத்திய அரசை கண்டித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பேரணி நடத்தினர்.

p

இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தினுள் நடத்தப்பட்ட அப்பேரணி முடியும் தருவாயில் அதை சீர்குலைக்கும் விதமாக பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மாணவர்கள் காஷ்மீரை பிரித்ததை கொண்டாடுவதாக கூறி பேரணி முன்பாக பட்டாசுகளை வீசி வெடிக்க செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

p

'சகிப்புத் தன்மையற்ற முறையில் பா.ஜ.க மாணவர்கள் நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது' என்றும், 'வலதுசாரி சிந்தனையுடையோரின் இதுபோன்ற அநாகரீமான செயல்களை மாணவர்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு முறியடிப்போம்' என புதுச்சேரி மாநில இந்திய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.

p

Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe