புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் தொடர் விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.
இதனால் சாலை விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேருந்து டிரைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டினால் ரூ.400, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்த அபராதம் வசூல் இன்று முதல் நடைமுறைப் படுத்தப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.