p

Advertisment

புதுச்சேரி அடுத்த ஆரோவில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தனது 7 வயது மகளை புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப காலதாமதமானதால் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்ராஜ் என்கிற விக்கி(21)யை அழைத்து தனது மகளை பள்ளியில் விட்டு வருமாறு கூறியுள்ளனர். சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் சென்று ஐயப்பன்ராஜ் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லாமல், பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். சிறுமி அழுததால் பயந்த ஐயப்பன்ராஜ் சிறுமியை பள்ளிக்கூட வாசலில் இறக்கிவிட்டு வந்துள்ளார்.

இதுபற்றி அந்த சிறுமி பள்ளி ஆசிரியரிடம் கூறவே அவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ஐயப்பன் ராஜாவை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நாவற்குளம் பகுதியில் தொடர்ந்து சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுவதால் அப்பகுதியில் உள்ள பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.