Advertisment

அமைச்சர் ஆட்களுக்கு பாண்டிச்சேரி மதுபானபாட்டில் சப்லை... - கைதான பெண்கள் வாக்கு மூலம்!!

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார் அடங்கிய தனிப்படையினர் 22.-ஆம் தேதி மற்றும் 23ந் தேதி மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, குமாரபாளைையத்தை சேர்ந்த மணி, சாந்தி ஆகியோர் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் 40 பாண்டிச்சேரி ஃபுல் பிராந்தி பாட்டில்களை கொண்டு வந்துள்ளனர்.

Advertisment

wine

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதேபோல் இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டலூர் கேட் பேருந்து நிறுத்தத்தில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தெய்வானை , ஈஸ்வரி, மல்லிகா (எ) பழனியம்மாள் ஆகியோர் ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்திலும், சுமார் அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 163 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்தனர்.மொத்தம் 203 பாட்டில்கள் - 133 லிட்டர் சட்டவிரோதமாக கடத்திவந்து குமாரபாளையம் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

Advertisment

wine

wine

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மேற்படி ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் விசாரித்த போது குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இந்த மதுபாட்டில்களை கொண்டு செல்வதாகவும், வாரம் ஒருமுறை கட்சி நிர்வாகி ஒருவர் பாண்டிச்சேரியில் இந்த மதுபாட்டில்களை வாங்கி எங்களிடம் கொடுத்து அனுப்புவார் நாங்கள் பேருந்து மூலம் கொண்டு வந்து பள்ளிபாளையத்தில் சேர்ப்போம் எங்களுக்கு பயண செலவு போக ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் எனக் கூறியிருக்கிறார்கள் அப்பெண்கள். இந்த தொகுதி அமைச்சர் தங்கமணியின் தொகுதி ஆகும்.பாண்டிச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் பர்ச்சேஸ் செய்தது அமைச்சருடன் நெருங்கியஅ.தி.மு.க. நிர்வாகிகள் என்பதால் கைதான பெண்கள் கொடுத்த தகவலை மறைத்துவிட்டு அவர்களை சிறைக்கு அனுப்பியது நாமக்கல் போலீஸ்.

wine TASMAC Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe